ஞானியும் குடிகாரனும்...........

Leave a Comment
ஒரு குடிகாரன் ஞானி ஒருவரைத் தேடி அவர் இருக்குமிடத்துக்கு வந்தான்.

""நானொரு குடிகாரன். நான் திருந்துவதற்கு ஒரு வழி கூறுங்கள் ஐயா...'' என்று கேட்டுக் கொண்டான்.

அதற்கு ஞானி, ""நாளை மாலை என்னை வந்து பார் சொல்கிறேன் என்றார் ''. மறுநாள் மாலை குடிகாரன் ஞானியைத் தேடி வந்தான்.

அப்போது ஞானி ஒரு தூணைக் கட்டிப் பிடித்துக் கொண்டு நின்றார். அவன் வருவதையறிந்த ஞானி தூணைப் பார்த்து, ""ஐயோ என்னை விட்டுவிடு... விட்டுவிடு...''
என்று கத்திக் கொண்டிருந்தார். உடனே குடிகாரன்,


""நீங்கள்தானே தூணைப் பிடித்துக் கொண்டிருக்கிறீர்கள்? அதை விட்டுவிடுங்கள் '' என்றான்.

உடனே ஞானி சிரித்துக் கொண்டே, ""நான் தூணைப் பிடித்துக் கொண்டிருப்பது போல, நீ தான் குடியைப் பிடித்துக் கொண்டிருக்கிறாய். நீயே விட்டுவிடு என்றார் ...!

அந்த கனமே உணர்ந்த மனிதன் அக்குடியை தவிர்த்தான்.

நீதி: பல பிரச்சனைகளே நாமே உருவாக்கிப் பெரிதுபடுத்தி அதனிலிருந்து வெளியில் வரமுடியாமல் அல்லற்படுகிறோம். நமது குழப்பங்களுக்கு நாமே காரணமென உணரும்போது நாம் அவற்றிலிருந்து விடுதலை பெறுகிறோம்.

0 comments: